தேவைகளை நிறைவேற்ற யாரும் இல்லை என முழங்கால் போட்டேன் என் மனதை அறிந்தவராய் என் தேவன் இருந்தார். ஒவ்வொரு நொடியும் என்னுடன் பேசினார். சங்கீதம் வழியாகவும் நீதிமொழிகள் 2 வழியாகவும் அவர் எனக்கு சொன்னது போல இருந்தது. ஆமென் அவர் நல்லவர்.
ஓர் நாள் சின்ன பரிசோதனை மருத்துவர்கள் செய்ய சொன்னார்கள். நான் செய்தேன். நாங்கள் எதிர்பாராத விதமாக பரிசோதனை தவறாக இருந்தது மருத்துவர்கள் பார்த்து நீங்கள் பாருங்கள் என் எங்கள் மனதை கலங்க படுத்தின நேரம் அதூ அழுதோம் கண்ணீர் வடித்தோம் இதை எடுத்துக் கொண்டு அடுத்த கட்ட மருத்துவம் சென்றோம். ஜெபம் செய்தோம் பழைய மருத்துவ சான்றிதழ் தவறு என சொல்லும் அளவு புது மருத்துவரின் பதில் இருந்தது. கர்த்தருக்கே ஸ்தோத்திரம்
